ஒரே நாளில் சவரனுக்கு 832 ரூபாய் குறைந்த தங்க விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

0

சென்னையில் வாரத்தின் முதல் நாளான நேற்று சிறிதளவு குறைந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 832 ரூபாய் சரிந்துள்ளது பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தனை நாட்கள் நகை வாங்குவதை தள்ளிப்போட்டு வந்த மக்கள் விலை குறைந்த காரணத்தால், கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பி விட்டது என்றே சொல்லலாம். நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாக சரிந்த காரணத்தால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீதான முதலீடுகள் அதிகரித்து தேவையும் பன்மடங்கு உயர்ந்தது. விளைவு, யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஊரடங்கு காலத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்டு உள்ள தளர்வுகள் காரணமாக வர்த்தகம் துளிர்விட தொடங்கி உள்ளது. இதனால் பிற துறைகளில் பங்குகள் மதிப்பு உயரத் தொடங்கி உள்ளதால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருந்து சற்று விலகி உள்ளது என்றே சொல்லலாம். இதனால் கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிந்து வந்த விலை, இந்த வாரத்திலும் குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) 104 ரூபாய் குறைந்து ரூ.4,644க்கும், ஒரு சவரன் ரூ.832 சரிந்து 37,512 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.64.50 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here