தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

0

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதனால் நகை விற்பனை சரிந்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இன்றைய நிலவரம்:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழில் துறைகள் வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்தன. இதன் விளைவாக அமெரிக்க டாலர்கள், பங்குச்சந்தைகளில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் அச்சத்தில் பாதுகாப்பான முதலீடாக விளங்கும் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் அதன் தேவை அதிகரிக்கத் தொடங்கி விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிற நாடுகளில் வெறும் முதலீட்டு பொருளாக பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் ஆபரணமாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் தங்க நகைகள் இன்றி நிறைவு பெறாது. பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரலாறு காணாத அளவு ஊரடங்கில் ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதனால் ஊரடங்கில் சிறிய பட்ஜெட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்ட மக்களும் நகை விலையை கேட்டு உறைந்து போயினர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் (22 காரட்) சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.17 அதிகரித்து ரூ.4,774க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.40 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here