நகை கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – தமிழக அரசு போட்ட புதிய உத்தரவு!!

0
rbi gold loan

கூட்டுறவு நிறுவனங்களில் ஒரே குடும்பத்தை சார்ந்த பலர் ஐந்து சவரனுக்கு மேல் நகை கடன் பெற்றிருந்தால் அவர்களது கடன் நிலுவை தொகையை வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான அரசு கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது.  ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் இது குறித்த விசாரணை நடத்தி கடன் பெற்றவர்களின் உண்மை நிலவரங்களை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தற்போது இது சார்ந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆதார் கார்டு எண்ணை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.  இவர்களில், 5 சவரனுக்கும் மேல் நகை கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.  இதற்காக கடந்த மார்ச் 31 ஆம் தேதியில் இருந்து ஜூலை 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here