நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 9.5 % சரியும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிக்கை!!

0
RBI Governor
RBI Governor

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் சரியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார். மேலும் ரெப்போ வட்டி விகிதமும் 4% ஆக நீடிக்கும் என கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்:

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. வரிவசூல் குறைந்ததால் அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்கள் கூறுகையில், தொற்றுநோய்களுக்கு மத்தியில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்திய பொருளாதாரம் ஒரு வளர்ச்சி பாதைக்கு திரும்புவதாக அவர் கூறினார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

GDP
GDP

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் (2020-2021) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் சரியும் என தெரிவித்தார். இருப்பினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) சரிவில் இருந்து மீண்டு இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் முன்னேற்ற பாதைக்குள் நுழையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அக்.15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

அதுமட்டுமின்றி செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட பணவீக்கம் அக்டோபர், நவம்பர் என அடுத்தடுத்த மாதங்களில் குறையும் என்றும் நம்பிக்கை அளித்தார். ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீடிக்கும் எனவும் சக்தி காந்த தாஸ் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here