அக்.15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0

நாடு முழுவதும் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ‘அன்லாக் 5.0’ விதிகளில் பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி வரும் அக்.15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • பூங்காக்களில் உள்ள சவாரிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னும், பின்னும் பார்வையாளர்கள் தங்கள் கைகளை கட்டாயமாக கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • பொதுமக்கள் அடிக்கடி தொடும் கருவிகளின் மேற்பரப்புகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.
  • தினசரி பூங்காக்கள் திறக்கப்படுவதற்கு முன்பு அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், உணவகங்கள், கிப்ட் ஷாப், தியேட்டர்கள் போன்ற அனைத்து பகுதிகள் மற்றும் திறந்தவெளிகள் 1% சோடியம் ஹைபோகுளோரைட் உடைய கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
  • பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை.
  • பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • எந்தவொரு சவாரிகளிலும் அல்லது உணவகங்களிலும் கூட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி யை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.
  • கொரோனா அறிகுறி இல்லாத நிர்வாக ஊழியர்கள், பார்வையாளர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • 65 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here