மனிதனை வானில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பறக்க வைக்கும் வகையில் புதிய காஸ்-டர்பைன்ஸ்-பவர்ட் ஜெட் ஆடைகளை வடிவமைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மார்வெல் மேன் என அழைக்கப்படும் சாம் ரோஜர்ஸ்.
வெற்றிகரமான பரிசோதனை..!
இந்த காஸ்-டர்பைன்ஸ்-பவர்ட் ரக ஆடைகளை தயாரித்து ஒரு நதியின் மீது பறந்து அந்த சோதனையில் வெற்றியும் கண்டு உள்ளார் சாம் ரோஜர்ஸ். வருங்காலத்தில் மனித போக்குவரத்தை எளிமையாக்க இது உதவும் எனவும் கூறப்படுகிறது. ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இந்த உடை மிகவும் பயன்படும் எனப்படுகிறது.
இது குறித்து கூறிய சாம் ரோஜர்ஸ், உங்களை சுற்றி 5 டர்போ ஜெட்டுகள் இயங்குவது ஒரு வித வினோதமான உணர்வை கொடுக்கும் என்கிறார். இப்போது உள்ள நிலையில் பல லட்சங்கள் விலை பெறும் இந்த ஆடை அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும் போது விலை குறையும் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |