ஸ்மார்ட் போன் பயனாளர்கள் கவனத்திற்கு.., மோசடியை தவிர்ப்பதற்கு இதுதான் வழி.., எச்சரிக்கும் போலீஸ்!!

0
ஸ்மார்ட் போன் பயனாளர்கள் கவனத்திற்கு.., மோசடியை தவிர்ப்பதற்கு இதுதான் வழி.., எச்சரிக்கும் போலீஸ்!!

OTP மூலம் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்ற மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை அறிவிப்பு:

அண்மை காலமாக சமூக ஊடக தளங்கள் மற்றும் செயலிகள், மோசடியில் ஈடுபட முக்கிய கருவியாக பயன்படுத்தபட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த வகை மோசடி, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், ஏடிஎம் மோசடி வழக்குகள், கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் OTP மோசடி வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளதாக காவல்துறை தகவல் கூறுகிறது.

அதாவது மோசடி கும்பல், ஒரு லிங்கை மெயில் அல்லது மெசேஜ் மூலமாகவோ நபருக்கு அனுப்பி, அதை கிளிக் செய்தால் உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும் என ஆசையை தூண்ட செய்கின்றனர். மேலும் அந்த லிங்க்கை, கிளிக் செய்தவுடன் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. இந்த மோசடியில் ஏராளமான நபர்கள் சிக்கியுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்கள் இதில் அதிகம் சிக்குவதாக தெரிவிக்கின்றன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து நபருக்கே தெரியாமல், அவர்களுடைய தனிப்பட்ட வங்கி விவரங்கள் திருடப்பட்டு, அதன் மூலம் OTP அனுப்பப்பட்டு பணம் திருடப்படுகிறது. இந்நிலையில், “உங்களது தொலைபேசியில் email மற்றும் sms-ஐ தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டே இருங்கள் அப்போதுதான் உங்களுக்கே தெரியாமல் வரும் OTP களை தவிர்க்க முடியும்” என தமிழக காவல்துறை, பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here