மாநிலத்தில் பள்ளிகளுக்கு அக்.9 வரை தொடர் விடுமுறை – அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - அதிரகாரபூர்வ தகவல் வெளியீடு!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - அதிரகாரபூர்வ தகவல் வெளியீடு!!

மாநிலத்தின் முக்கிய மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற அக்டோபர் 9ஆம் தேதி வரை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட பொதுக் கல்வித் துறை இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு, மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 13 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம் மாவட்டத்தின் பொது கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கல்வி காலண்டரில் அக்டோபர் 3 முதல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்ததை மாற்றி, இந்த மறு அறிக்கை வெளியிடப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த விடுமுறை நாட்களை மாற்றி உள்ளதாக மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோம சேகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here