பொன்னியின் செல்வம் படத்துல ரசிகர்கள் இதை ஏத்துக்குவாங்களானு தெரியல.., திரிஷா ஓபன் டாக்!!

0
பொன்னியின் செல்வம் படத்துல ரசிகர்கள் இதை ஏத்துக்குவாங்களானு தெரியல.., திரிஷா ஓபன் டாக்!!

மணிரத்னத்தின் திரைப்படமான பொன்னியின் செல்வன் வருகிற செப் 30ம் தேதி திரை காண இருக்கிறது. நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து திரிஷா சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது, ” நான் இதுவரை வரலாற்று மிக்க படங்களில் நடித்தது கிடையாது. அதனால் இப்படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன். அதுமட்டுமின்றி எனக்கு நன்றாக தமிழ் பேச தெரியாது என்ற காரணத்தினால் நடிப்பதற்கு திகைத்தேன். ஆனால் என் மேல் நம்பிக்கை வைத்து இயக்குனர் மணிரத்தினம் இந்த வாய்ப்பை கொடுத்தார்.இப்படத்திற்காக நானும் தொடர்ந்து முயற்சி செய்து, படப்பிடிப்பின் போது நானே தமிழில் பேசி நடித்தேன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே போல் இன்னொரு குழப்பமும் எனக்கு இருந்தது. நடிகர் விக்ரம் மற்றும் ஜெயம் ரவிக்கு நான் ஏற்கனவே ஜோடியாக நடித்துள்ளேன், தற்போது இப்படத்தில் நான் அவர்களுக்கு சகோதரி கேரக்டரில் நடித்திருக்கிறேன் . இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?? என்ற பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது அந்தந்த கேரக்டர்களாகவே மாறிவிட்டோம். அதனால் கண்டிப்பாக ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here