குத்தாட்டம் போடும் பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0

பிக் பாஸ் மூலமா மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கேபி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹாட் விடீயோவினை பதிவிட்டுள்ளார். அந்த விடீயோவிற்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

குழந்தை நட்சத்திரம் கேபி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் குழந்தைகள் தான் பின்னாளில் பெரிய பெரிய நடிகைகளுக்கு போட்டியாக இருப்பர். அந்த வகையில் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாக இருப்பவர் தான் கேபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மிகவும் சிறிய பெண்ணாக அறிமுகமானவர். இவர் முதன் முதலாக “3” திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

சின்னத்திரையில் ரோஜா சீரியல் செய்த சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்த திரைப்படத்திற்கு பின்பாக இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இது மட்டும் இல்லாமல் தனது சிறு வயதிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் தனது திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதே போல் அந்த வீட்டில் இவருக்கும் பாடகர் ஆஜித்துக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். இப்படியாக இவர் இருந்தாலும், இவருக்கு பாலாஜியின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே பணத்தை எடுத்து கொண்டு விலகினார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தான் நடனமாடும் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here