வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலா – என்ன காரணம் தெரியுமா.?

0

வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 7ம் தேதி அதிகாலையில் இந்த பிங்க் சுப்பர் நிலா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசந்தகாலத்தின் முதல் பௌர்ணமியாக இந்த சூப்பர் பிங்க் நிலா இரவு வானத்தில் ஒளிரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் பிங்க் நிலா:

இந்த நிலவை “இளஞ்சிவப்பு” நிலா என்று அழைத்தாலும், அதன் நிறம் இயல்பை விட வித்தியாசமாக இருக்காது. இது வானத்தில் கீழ் பகுதியில் இருக்கும் போது தங்க ஆரஞ்சு நிறமாகவும், உயரும்போது வெள்ளை நிறமாகவும் இருக்கும் எனகூறப்படுகின்றது. ஏப்ரல் 7ஆம் தேதியன்று, நிலா 30,000 கிலோ மீற்றர் தூரத்தில் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தூரம் 221,772 கிலோ மீற்றராக காணப்படும்.

நிலாவின் அளவில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதனை அன்றைய தினம் காண முடியும், இது சராசரி நாளை விட 15 வீதம் பெரியதாக தோன்றும் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலாவே இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான சூப்பர் நிலாவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா அறிவிப்பு:

இந் நிலா பிரித்தானிய நேரம் அதிகாலை 3:55 மணியளவில் காணப்படும் எனவும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் வசந்த காலத்தில் பிங்க் வண்ணத்தில் பூக்கள் பூக்கும். அதை இணைத்துதான், நாளை வரும் நிலவுக்கு பிங்க் என்று பெயரிட்டுள்ளனர். இந்த சூப்பர் பிங்க் நிலா வானத்தின் கீழ் பகுதியில் இருக்கும்போது தங்க ஆரஞ்சு நிறத்திலும், வானத்தில் உயரும் போது வெள்ளை நிறமாகவும் இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாளை இரவு தோன்றும் இந்த சூப்பர் பிங்க் நிலவு புதன்கிழமை அதிகாலை வரை தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. நாளை இரவு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடிந்தாலும், 8-ஆம் தேதி காலை 8.05 மணிக்கு இந்தியாவில், இந்த சூப்பர் பிங்க் நிலவு தோன்றும் இதன் பிரகாசம் உச்ச அளவை எட்டுகிறது. நள்ளிரவில் ரசிக்கலாம்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here