அனைவருக்கும் சானிடரி நாப்கின்கள் இலவசம் – புதிய திட்டம் அமல்!

0
அனைவருக்கும் சானிடரி நாப்கின்கள் இலவசம் - புதிய திட்டம் அமல்!
அனைவருக்கும் சானிடரி நாப்கின்கள் இலவசம் - புதிய திட்டம் அமல்!
அனைவருக்கும் சானிடரி நாப்கின்கள் இலவசம் – புதிய திட்டம் அமல்!

பல நாடுகளில் பெண்கள் தற்போது வரைக்கும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். இவர்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இலவச நாப்கின்கள் வழங்கவும் ஸ்காட்லாந்து அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

இலவச சானிடரி நாப்கின்:

ஸ்காட்லாந்து நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு The Period Products (Free Provision) என்கிற சட்டத்தின் மூலமாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இந்த திட்டம் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது வரைக்குமே பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைக்கோல், மணல், கந்தல் துணிகள் போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலைமை ஒழிய வேண்டும் என்பதற்காகவே இலவசமாக நேப்கின்கள் மற்றும் அனைத்து மாதவிடாய் பொருட்களையும் இலவசமாக கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறை என அனைத்து இடங்களிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதவிடாய் கால பொருட்கள் அருகில் எங்கு கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் Hey Girls என்கிற நிறுவனம் Pick My Period என்கிற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

மேலும், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும், மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இன்னும் சில கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பது ஆகியவற்றை செய்து கொண்டிருக்கின்றனர். இது போன்ற அறியாமையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர ஸ்காட்லாந்து அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here