2021ம் ஆண்டு ஜூன் வரை ‘இலவச ரேஷன் பொருட்கள்’ – மாநில முதல்வர் அறிவிப்பு..!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!
தமிழக குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க முடிவு! உணவுத்துறை அதிரடி!!

மேற்கு வங்க மாநிலத்தில் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

இலவச ரேஷன் திட்டம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். மேலும் வரிவசூல் குறைந்ததால் அரசுக்கும் மிகப்பெரிய அளவு வருவாய் குறைந்து உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கு நேரத்தில் ஏழை மக்களும் தினமும் உணவருந்த ஏதுவாக உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

West Bengal CM
West Bengal CM

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து 3 மாதங்களாக இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஆகஸ்ட் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ‘இலவச ரேஷன் பொருட்கள் திட்டம்’ நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த முதல்வர் மம்தா பானர்ஜி, அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு தேவையான தானியங்களை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here