ஊடகதுறையினர் மற்றும் அவரது குடும்பங்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை – மாநில முதல்வர் அதிரடி!!

0
Reporter. Taking notes. Media interview.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளில் சில துறையினருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று:

சுமார் 2 மாத காலமாகவே இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளும் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் இருந்து சில துறையினருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், ஊடகதுறையினர் போன்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் சுழற்சி முறையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்களில் அதிகமானவர்கள் கொரோனவினால் பலியாகி வருகின்றனர். ஊடகதுறையினரும் மக்களுக்கு கொரோனா பற்றிய முழு தகவல் தெரிய வேண்டும் என்பதற்காக மிக கடுமையாக தங்களது பணிகள் செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கர்நாடகாவில் வான்வெளி ஆம்புலன்ஸ் சேவை – பாதுகாப்பு குழு இணை இயக்குனர் பெருமிதம்!!

தற்போது அவர்கள் பயனடையும் வகையில் மத்திய பிரதேச முதல்வர் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் தெரிவித்ததாவது, அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத ஊடகதுறையினர் மற்றும் அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணிபுரியும் ஊடக நபர்கள் அல்லது அவர்களது குடும்பத்தார் கொரோனாவினால் தாக்கப்பட்டால் அதற்குரிய செலவினை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here