கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் !!! – முதல்வர் அறிவிப்பு

0
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் !!! - முதல்வர் அறிவிப்பு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் !!! - முதல்வர் அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் !!! – முதல்வர் அறிவிப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கல்விச் செலவை அரசே ஏற்கும் :

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று 2 வது அலையில் கடந்த மாதம் மோசமான நிலையை எட்டியது. இறப்பு எண்ணிக்கையும் உச்சம் தொட்டது. அப்போது பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில் எரிக்கப்படுவது போன்ற படங்களும் வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் டெல்லியில் இதுவரையில் 20,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள பெற்றோர்களின் குழந்தைகள் ஆதரவின்றி இருப்பதால் அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், கொரோனாவால் குடும்பத்தில் உறுப்பினர்கள் இழந்து தவிக்கும் முதியவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here