தமிழகத்தில் இரு பாலருக்கும் இலவச பேருந்து வசதி – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் இரு பாலருக்கும் இலவச பேருந்து வசதி - மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச பஸ் வசதி:

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில் 188 நாடுகள் பங்கேற்க இருக்கின்றனர்.தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது இதுவே முதல் முறை. இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தெம்பூட்டும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு விளம்பரத்தில் நடித்து அதை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு வருவதற்கு சிரமம் இருப்பதால் அவர்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதாவது, வெவ்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் போட்டிக்கு பங்கேற்க போட்டியாளர்கள் வருவதை தொடர்ந்து மாமல்லபுரத்திற்கு செல்ல போக்குவரத்தில் சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற கணக்கில் 5 பேருந்துகள் மக்கள் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த வசதி ஜூலை 25 முதல் அமலுக்கு வரும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முடியும் வரை இந்த வசதி நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here