இனி இவங்களுக்கு ஆட்டோ பயணமும் இலவசம்…, பேரூராட்சியின் அதிரடி முடிவு!!

0
இனி இவங்களுக்கு ஆட்டோ பயணமும் இலவசம்..., பேரூராட்சியின் அதிரடி முடிவு!!
இனி இவங்களுக்கு ஆட்டோ பயணமும் இலவசம்..., பேரூராட்சியின் அதிரடி முடிவு!!

தமிழகத்தில், கார், பஸ், ஆட்டோ, ரயில் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவற்றில், மிக நீண்ட தூரத்திற்கு செல்ல, கார், பஸ், ரயில் போன்றவை உதவினாலும், பொது மக்களின் அவசர தேவைக்கும், குறுகிய தூரத்திற்கு செல்வதற்கும், மூன்று சக்கர வாகனமான ஆட்டோ தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணர்ந்த, ஆட்டோ ஓட்டுநர்கள் பலர், பிரசவத்திற்கு தாய்மார்களை இலவசமாக அழைத்து சென்று வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் தொடர்ச்சியாக தற்போது, முதியவர்களுக்கு இலவசமாக பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2500 க்கு மேல் உள்ளனர். இவர்களுக்காகவே, இந்த பேரூராட்சி, 15 கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதியில், மாதாந்திர மருத்துவ சிகிச்சை, அவசர மருத்துவ தேவை மற்றும் நியாயவிலை கடை ஆகிய இடங்களுக்கு செல்வதற்காக எந்த நேரமும் ஆட்டோவில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

ரூ.5,000 மட்டும் கட்டுங்க., 8.32 லட்சத்தை வாங்கிக்கோங்க??? பம்பர் ஆஃபர் வெளியிட்ட வங்கி!!!

இந்த திட்டத்தை பெற, 60 வயது முதியவர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பதிவு செய்த உடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்கள் ஆட்டோவில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான ஆட்டோக்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவியும் வழங்கி வருவதால், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே இந்த திட்டம் முதன் முறையாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் தான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here