கொரோனா தொற்று எதிரொலி – ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி பலி!!

0

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று:

இந்தியாவில் தினசரியாக கொரோனா தொற்றினால் லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்தும் மேலும் பல கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதி இல்லாமல் உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் உயிரிழப்பினை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சிலரது கவனம் ராஜிவ் காந்தி கொலை வழக்கு பக்கம் திரும்பியுள்ளது. இதுகுறித்த முடிவு விரைவில் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கினை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி மரணமடைந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி – குஷியில் நகை விரும்பிகள்!!

இந்த வழக்கினை முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் விசாரித்தார். தற்போது இவரது பதவி காலம் முடிவடைந்த பின்பு இவர் சென்னையில் உள்ள கே.கே.நகரில் வகித்து வந்தார். இவரது வயது 72. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here