FIFA உலக கோப்பையின் சிறந்த வீரர் யார்?? பரிந்துரையில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே!!

0
FIFA உலக கோப்பையின் சிறந்த வீரர் யார்?? பரிந்துரையில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே!!
FIFA உலக கோப்பையின் சிறந்த வீரர் யார்?? பரிந்துரையில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே!!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த வீரரை தேர்வு செய்யும் பரிந்துரை பட்டியலில் நட்சத்திர வீரர்களான, மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே முன்னிலையில் உள்ளனர்.

FIFA சிறந்த வீரர்:

கத்தாரில் FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணியானது பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3 வது முறையாக கோப்பையை தட்டி சென்றது. நடந்து முடிந்த இந்த உலக கோப்பையில், FIFA சிறந்த ஆடவர் விருது 2022க்கான தேர்வுப் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியும், பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே இடம் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து, அர்ஜென்டினா சாம்பியன் ஆனதற்கு முக்கிய காரணமாக இருந்த கோல்கீப்பர் ஜூலியன் அல்வாரெஸ், எமிலியானோ மார்டினெஸ் மற்றும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பரிந்துரை பட்டியலில் உள்ளனர்.

காலிறுதியில் ஏமாற்றிய H S பிரணாய்…, மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சரிவு!!

மேலும், பார்சிலோனாவின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, மான்செஸ்டர் சிட்டி கெவின் டி புரூய்ன், லிவர்பூலின் முகமது சலா, பிஎஸ்ஜியின் நெய்மர் மற்றும் அக்ரஃப் ஹக்கிமி ஆகியோரும் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here