FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவுடன் தொடங்கிய இந்திய அணி!!

0
FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவுடன் தொடங்கிய இந்திய அணி!!
FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவுடன் தொடங்கிய இந்திய அணி!!

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியினர் எதிர்கொண்ட 2 சுற்றையும் டிரா செய்துள்ளது.

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்:

இஸ்ரேலின் ஜெருசலேமில் FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின், முதல் சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் விதித் எஸ் குஜராத்தி இஸ்ரேல் வீரரான மாக்சிம் ரோட்ஷ்டீனுக்கு எதிராக போட்டியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியானது டிராவில் முடிய, இந்தியாவின் நிஹால் சரின், எஸ் பி சேதுராமன் மற்றும் அபிஜீத் குப்தா இவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தனர். இதனை தொடர்ந்து, 2வது சுற்றில், இந்திய அணி போலந்து வீரர்களை எதிர்கொண்டனர்.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கடைசி யுத்தம்…, பிளேயிங் லெவனில் இந்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இதில், போலந்தின் இகோர் ஜானியிடம் எஸ் பி சேதுராமன் தோல்வியடைய, அபிஜீத் குப்தா போலந்து வீரருக்கு எதிராக வெற்றி பெற்றார். ஆனால், விதித் எஸ் குஜராத்தி மற்றும் நிஹால் சரின் போட்டியை டிரா செய்தனர். இதன் மூலம், இந்திய அணி போலாந்துக்கு எதிரான ஆட்டத்தையும் டிரா செய்தது. இந்த உலக கோப்பையில் இந்தியா எதிர்கொண்ட முதல் இரண்டு சுற்றையும் டிரா செய்து 2611 புள்ளிகளை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here