டெல்லியில் தீவிரமெடுக்கும் போராட்டம்.., விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி.., நீடிக்கும் பதற்றம்!!!

0

டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய சங்கங்களுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை அதற்கு எந்த ஒரு முடிவும் கிடைத்த பாடில்லை. மேலும் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிராகரித்து வரும் சூழ்நிலையில் விவசாயிகள் நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? சபாநாயகர் முக்கிய அறிவிப்பு!!!

இந்நிலையில் தலைநகர் டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டனர். இதனால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பெரும் பரபரப்பு நீடித்தது. மேலும் சாலையின் நுழைவுப் பகுதியில் தடுப்பு அரண்களை அமைத்து போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் விவசாயிகளின் இந்த போராட்டத்தால் டெல்லி உ பி எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here