பிரபல விஜய் பட பின்னணி பாடகர் மாரடைப்பால் மறைவு – பிரதமர் மோடி இரங்கல் பதிவு!!

0
பிரபல விஜய் பட பின்னணி பாடகர் மாரடைப்பால் மறைவு - பிரதமர் மோடி இரங்கல் பதிவு!!
பிரபல விஜய் பட பின்னணி பாடகர் மாரடைப்பால் மறைவு - பிரதமர் மோடி இரங்கல் பதிவு!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகராக வலம் வந்த கிருஷ்ணகுமார் குன்னத் தனது 53 வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சி மறைவு :

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். கடந்த, 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பின்னணிப் பாடகராக திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், பல பாடல்களைப் இவர் பாடியுள்ளார். தமிழில் விஜய்யின் கில்லி படத்தில் அப்படி போடு பாடல், செவன் ஜி ரெயின்போ காலனி நினைத்து நினைத்து பாடல், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அம்மா பாடல், சாமி படத்தில் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் உள்ள, கல்லூரி நிகழ்வு ஒன்றில் பாடி முடித்துவிட்டு ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார். இதையடுத்து திரைப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கேகே மறைவிற்கு, ஆழ்ந்த சோகங்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here