மகளிருக்கு மாதம் ரூ.1000., ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

0
மகளிருக்கு மாதம் ரூ.1000., ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!
மகளிருக்கு மாதம் ரூ.1000., ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்க உள்ள நிலையில் முதலமைச்சர் இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். மேலும் விண்ணப்ப பதிவு முகாம்கள் காலை 9:30 முதல் 1 மணி வரையும், மதியம் 2 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதேபோன்று குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சரியான நேரத்திற்குள் முகாமில் கொடுத்து விட்டார்களா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பெரம்பலூரில் இன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்ப படிவங்களை குடும்ப அட்டைதாரர் வீட்டுக்கே சென்று கொடுக்க வேண்டும். ஒரு வேலை குடும்பத் தலைவிகள் வீட்டில் இல்லையென்றால் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களிடம் வழங்கி ஒப்புதல் வாங்க வேண்டும்.

மாணவர்களே., NexT தேர்வு இப்போதைக்கு இல்லை? சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

மேலும் குடும்பத் தலைவிகளிடம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப வழங்குவதற்கான முகாம் எந்த தேதி, நேரத்தில் நடைபெறும் என்பதையும் எந்த தெளிவாக விளக்கி அதற்கான டோக்கன்களையும் கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இது தவிர பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 282 நியாய விலை கடைகள் உள்ளது. இதனால் முகாம்கள் அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்கள், பள்ளிகளில் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here