மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., ஜூலை 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., முதல்வர் அறிவிப்பு!!!!

0
மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., ஜூலை 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., முதல்வர் அறிவிப்பு!!!!
மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., ஜூலை 16ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.., முதல்வர் அறிவிப்பு!!!!

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக டெல்லியில் கனமழையினால் கடந்த மூன்று நாட்களாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சொல்ல போனால் யமுனை ஆற்றில் கிட்டத்தட்ட 208.48 மீட்டர் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமின்றி வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் புகுந்த பகுதிகளுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகளிருக்கு மாதம் ரூ.1000., ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

இதனால் கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் வருகிற ஜூலை 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதால் பொது மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here