மாணவர்களே., NexT தேர்வு இப்போதைக்கு இல்லை? சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

0
மாணவர்களே., NexT தேர்வு இப்போதைக்கு இல்லை? சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியானதால், மாநில மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் PG நீட் தேர்வு மற்றும் வெளிநாடு மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வுகளை ஒன்றிணைக்க NExT நுழைவு தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் அறிமுகப்படுத்தியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கு மருத்துவ மாணவர்கள் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு NexT தேர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடனடியாக NexT தேர்வு முறையை கைவிட வேண்டும்.” என பிரதமருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழகத்தில் பான் எண்ணை இணைக்க சொல்லி ரூ.5,000 மோசடி., எப்புட்றா? காவல்துறை எச்சரிக்கை!!!

இந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை NexT தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் உட்பட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here