10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் – தமிழக அரசுத் தேர்வுகள் இயக்கம்

0

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு வினாத்தாளில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு தேர்வு அதிகாரியிடம் ஆசிரியர்கள் மனு அளித்திருந்தனர். தற்போது தமிழக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்தாம் வகுப்பு தேர்வுத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

2019 – 20 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கும் புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , இவ்வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளதால் , சென்ற ஆண்டு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே மாணவர்கள் புத்தகம் முழுமையும் படித்து புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

மேலும் , வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்திலிருந்தும் எந்த வகையிலும் ( வினாத்தாள் வடிவமைப்பில் ( Pattern ) மாற்றமின்றி கேட்கப்படலாம். மாதிரி வினாத்தாள் சான்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி பிரிவுகள் மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே அன்றி மாதிரி வினாத்தாட்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே ( எடுத்துக்காட்டாக பொருத்துக கோடிட்ட இடங்களை நிரப்புக , தலைப்பு வினாக்கள் , வரைபட வினாக்கள் , வடிவியல் வினாக்கள் மற்றும் பல ) கேட்கப்பட வேண்டும் என கட்டாயமில்லை. ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும் , ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்கள் | ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள் . முடிவாகும் . காவே , மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என பானவர்கள் | ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது . மாதிரி வினாத்தாள் , வினாத்தான் வடிவமைப்பிற்காக , ( Pattern ) மட்டுமே வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரை Blue Print இருந்ததால் , கட்டமைப்பு மாற்றமின்றி வினாக்கள் கேட்கப்பட்டன . ஆனால் புதிய பாடத்திட்டத்தில் கட்டமைப்பு இல்லாததால் , எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம் . ஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என்ற விவரத்தினை மாணவர்கள் / ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here