பத்ம ஸ்ரீ விருது பெற்ற பழ வியாபாரி – கர்நாடகா ஹஜப்பாவின் கதை..!

0

இந்திய குடியரசு தின விழாவினை முன்னிட்டு கடந்த ஜனவரி 26ம் தேதி பத்ம விருதுகள் ஜனாதிபதி கையால் வழங்கப்பட்டன. பல பிரபலங்கள், தலைவர்கள் பெற்ற இவ்விருதை கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வரரேகலா ஹஜப்பா என்ற ஆரஞ்சு பழ வியாபாரி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தன்னுடைய துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 16 பேருக்கு பத்ம பூஷண், 118 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 141 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்ம ஸ்ரீ விருதுக்கு கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா பகுதியை சேர்ந்தவர் வரரேகலா ஹஜப்பா என்ற ஆரஞ்சு பல வியாபாரியும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் எதற்காக தேர்வு செய்யப்பட்டார் என்ற கதை அனைவருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாளைக்கு ரூ. 150/- வருமானம்..!

வரரேகலா ஹஜப்பாவிற்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் ஆரஞ்சு பழ வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார். ஒரு நாளைக்கு ரூ. 150 வரை வருமானம் ஈட்டி வந்தார். ஒரு நாள் ஒரு வெளிநாட்டவர் இவரிடம் வேறு மொழியில் பழத்தின் விலையைக் கேட்க இவருக்கு அது புரியாததால் அந்த வெளிநாட்டவர் அவரிடம் பழம் வாங்காமல் சென்று விட்டார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஏழை மாணவர்களுக்கு பள்ளி..!

இதனால் தன்னைப்போல இந்த ஊரில் ஒருவரும் படிப்பறிவில்லாமல் வளர்ந்துவிடக் கூடாது என்பதால் மிகவும் சிரமப்பட்டு 2000ம் ஆண்டு அவருடைய கிராமத்தில் ஒரு பள்ளியைக் கட்டி முடித்தார். இந்த பள்ளியில் பல ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இவர் பள்ளியை தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

தன்னுடைய ஏழ்மையான நிலைமையிலும் இவர் செய்த இந்த சேவைக்கு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டு உள்ளது. இந்த விபரத்தை 25ம் தேதி வரரேகலா ஹஜப்பா ரேஷன் கடை வரிசையில் நின்று கொண்டிருந்த பொது அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் இதை நம்பாத இவர் பிறகு அதிகாரிகளின் விளக்கத்தைக் கேட்டதும் என்னைப் போன்ற எளியவருக்கும் அரசின் உயரிய விருது கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here