முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது – கர்நாடகாவில் வைத்து கொத்தாக தூக்கிய தமிழக போலீஸ்!!

0

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, மோசடி வழக்கில் தமிழக போலீசாரால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் கைது :

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் இருந்த துறைக்கு கீழ், அதாவது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி நபர்களிடம் 3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவரோடு சேர்த்து, அவரின் உதவியாளர்கள் 4 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிசம்பர் 17ஆம் தேதி தலைமறைவாகினார்.

அவரை தீவிரமாக தேடி வந்த, தமிழக போலீசார் அவரது வங்கி கணக்குகளை அண்மையில் முடக்கினர். இந்த நிலையில் தற்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here