ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்… வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!

0
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்... வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்... வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!

மாலை நேரம் வந்தாலே அனைவரும் மிகவும் விரும்புவது ஸ்னாக்ஸ். அதிலும் அப்படி நாம் சாப்பிட கூடிய அனைத்தும் ஆரோக்கியம் என்று சொல்வது கடினம். அதனால் அப்படிப்பட்ட உணவு வகைகளை வீட்டிலேயே செய்து நமது குடும்பத்தை ஆரோக்கியத்துடன் இருக்க செய்வது நமது கடமை. அந்த மாதிரியான ஒரு வகை ஸ்னாக்ஸ் ஐட்டம் பற்றி தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்... வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்… வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப்

வெண்ணெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

சோம்பு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 2

முட்டை கோஷ் – 1 கப்

கேரட் – 1 கப்

பீன்ஸ் – 1 கப்

பச்சை மிளகாய் – 2

பச்சை பட்டாணி – 1/2 கப்

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

சோயா சாஸ் – 1/2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் – 1/2 தேக்கரண்டி

சோள மாவு – 2 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

பிரட் தூள் – சிறிதளவு

செய்முறை:

முதலில் மைதா மாவு,உப்பு மற்றும் வெண்ணை ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த கலவையை சிறிது நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். இந்நிலையில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு,சீரகம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதையடுத்து துருவி வைத்து உள்ள முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்... வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!
ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சூப்பரான வெஜ் ரோல்… வீட்டுல செஞ்சு அசத்துங்க!!!

வதங்கி வரும் நேரத்தில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து காய்கறிகளுடன் மசாலா பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேருமாறு கிளறி கொள்ள வேண்டும். அதன் பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். காய்கள் நன்றாக வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இதையடுத்து மைதா மாவு,சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவுகளை மெல்லிய சப்பாத்தி பதத்துக்கு போட்டு கொள்ள வேண்டும். அதில் வேக வைத்து உள்ள காய்கறிகளை வைத்து ஏற்கனவே கலந்து வைத்து உள்ள மைதா மாவு,சோள மாவு கலவைகளை பசை போல சப்பாத்தியின் ஓரங்களில் தேய்த்து ரோல் வடிவத்திற்கு செய்து கொள்ளவும். அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்து உள்ள ரோல்களை அதில் முக்கி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். தற்போது சுவையான மனமான வெஜ் ரோல் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here