
பிரபல நடிகரும், முன்னணி இயக்குனருமான மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் குறித்து முக்கிய உண்மைகளை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்து பேட்டி :
சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் மாரிமுத்து. பிரபல இயக்குனரான இவர் பல, ஒரு சில படங்களையும் இயக்கி உள்ளார். சமீப காலமாக, youtube சேனல்களின் பேட்டியில் பங்கேற்று வரும் இவர் அஜித் மற்றும் விஜய் குறித்த பல உண்மைகளை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த பேட்டியில் இவர் தெரிவித்ததாவது, யாராவது தனக்கு ஏதாவது செய்தால், அது நல்லதோ கெட்டதோ அஜித் ஒரு நிமிடத்தில் அதை மறந்து விடுவார். ஆனால், விஜய் அப்படி இல்லை. அவருக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால், எவ்வளவு நாள் ஆனாலும் அதை மறக்க மாட்டார்.
உதாரணமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எது நடந்தாலும் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாளிலோ அதை அப்படியே டபுள் ஆக திருப்பி கொடுத்துவிடுவார். விஜய்யோட கேரக்டரே இதுதான், என பரபரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.