இசைப்புயலுடன் டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா…,வைரலாகும் செல்ஃபி…..,

0
இசைப்புயலுடன் டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா...,வைரலாகும் செல்ஃபி.....,
இசைப்புயலுடன் டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா...,வைரலாகும் செல்ஃபி.....,

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இசைப்புயலின் செல்ஃபி

இந்திய சினிமாவின் இசைப்புயல் என்று அழைக்கப்படுபவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். தனது திறமையான இசை ஞானத்தால் இந்திய சினிமாவின் தரத்தை உலகெங்கும் எடுத்து சென்ற பெருமை ஏ.ஆர்.ரஹ்மானை சாரும். மற்ற சினிமா பிரபலங்களை போல சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு அதனை ரசிர்கர்களுடன் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஹ்மான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில், ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் மஹேஷ் பாபு உடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் உடன் கை கோர்க்கும் ஜான்வி கபூர்?…..,நாளை முக்கிய அப்டேட்….,

அதாவது, சர்வதேசிய டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீராங்கனை சானியா மிர்ஸா தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் வைத்து பிரபலங்களுக்கு ஃபேர்வெல் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த நிகழ்வுக்கு சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அங்கு எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here