ஐபிஎல் விதிமுறைகளை மீறிய இயோன் மோர்கன் – ரூ.12 லட்சம் அபராதம்!!

0

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி கேப்டன் இயோன் மோர்கன் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார்.

இயோன் மோர்கன்

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதியின்றி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டி. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓர் இன்னிங்சை 90 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் சாப்ட் சிக்னலுக்கு தடை போன்ற பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீண்ட நாட்களுக்கு பின்பு சென்னை அணி நேற்று தனது அதிரடியை காட்டியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 220 ரன்களை குவித்தது. இதனை சேஸ் செய்த கொல்கத்தா அணி 202 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் இயோன் மோர்கன் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

அதன்படி நேற்றைய போட்டியில் 20 ஓவரை 90 நிமிடத்தில் வீச வேண்டும் என்னும் விதிமுறையை மீறி பந்துவீச்சில் கூடுதலாக கொல்கத்தா அணி நேரம் எடுத்துள்ளது. தற்போது இதன் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் இயோன் மோர்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தோனி மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு பந்துவீச்சில் தாமதம் ஏற்பட்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here