என்ஜாய் எஞ்சாமி பாடகர்களுக்குள் வெடித்த பூகம்பம் – பாடகர் அறிவின் விளக்கத்துக்கு பாடகி தீ பதிலடி!!

0

சந்தோஷ் நாராயணன் இசையில், பாடகர்கள் அறிவு மற்றும் தீ ஆகியோர் குரலில் உருவான என்ஜாய் என்ஜாமி  பாடலால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து, பாடகி தீ நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

பாடகி விளக்கம்:

கடந்தாண்டு யூடியூபில் வெளியான, என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் பாடல் உருவாக்கத்தில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் அறிவு மற்றும் தீ  ஆகியோர் பங்களிப்பு பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில், பாடகர் அறிவு  இந்தப் பாடலின் வெற்றியில் இருந்து  புறக்கணிக்கப்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பேசிய அவர், 6 மாதம் இரவு பகல் பாராமல் அதனை உருவாக்கினேன் என்றும், உங்கள் பொக்கிஷத்தை நீங்கள் தூங்கும் போது யாரும் அபகரிக்கலாம்.

ஆனால் விழித்திருக்கும் போது அது நடக்காது. உண்மை வெல்லும் என  குறிப்பிட்டார். இந்த பதிவு குறித்து விளக்கம் அளித்த பாடகி தீ, இதுவரை எங்கள் 3 பேரின் வெற்றி தான் இந்தப் பாடலில் பேசப்பட்டது. எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் பாடகர் அறிவை ஒதுக்கவில்லை. அண்மையில் வெளியான ஒரு அட்டைப் படத்தில் நானும் ஷானும் சேர்ந்திருப்பது வேறு ஒரு ப்ராஜெக்ட்க்கான விளம்பரம் என குறிப்பிட்டார்.

இது வேறு இதற்கானதும் அல்ல  என்றும்  விளக்கம் அளித்தார். இது போக அண்மையில் நடந்த, நிகழ்வில் அறிவு பங்கேற்காததற்கான காரணம்  அவர் அமெரிக்காவில் இருந்ததால் தான் என்றும், அவருடைய குரலை பதிவு செய்து அந்த நிகழ்ச்சியில் தாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்  எனவும் குறிப்பிட்டார். பாடகி தீ-யின் இந்த நீண்ட விளக்கம், தற்போது பலரால் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here