Sunday, May 26, 2024

இங்கிலாந்து அபார வெற்றி – முதல் டெஸ்ட் முடிவுகள்!!

Must Read

இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டெர் மைதானத்தில் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசதித்ல் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பாகிஸ்தான் ஆல் அவுட்:

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்திருந்தது. நான்காம் நாளை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 169 ரன் களுக்கு மீதம் இருந்த இரண்டு விக்கெட்டையும் இழந்து, இங்கிலாந்து அணிக்கு இலக்காக 277 ரன்கள் நிர்ணயித்தது.

இங்கிலாந்து சொதப்பல் ஆரம்பம்:

இரண்டாவது இன்னிங்க்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ன்ஸ் மற்றும் சிப்ளே சுமாரான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்க்கு 22 ரன்கள் சேர்த்த பொழுது பேர்ன்ஸ் 10 ரன்களுக்கு அப்பாஸ் பந்தில் LBW முறையில் தன் விக்கெட்டை இழந்தார்.

மட மட வென சரிந்த விக்கெட்:

அடுத்த பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரூட் சிப்ளேவுடன் நல்ல பாட்னர்ஷிப் போட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இன்னிலையில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுத்து பொழுது சிப்ளே 36 ரன்களுக்கு யாசிர் ஷா பந்தில் அவுட் ஆனார். அவரை தொடந்து மள மள வென விக்கெட் சரிய ஆரம்பித்து.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

engalnd and pakistan team playing test series
engalnd and pakistan team playing test series

நன்றாக ஆடிக்கொண்டிருத்த ரூட் நசீம் ஷா பந்தில் 42 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்பு ஸ்டொக்ஸ் 9, போப் 7 ரன்களுக்கும் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். ஒரு நிலையில் 86 ரன்களுக்கு 1 விக்கெட் என்றிருந்த  இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாரியது.

வோக்ஸ் பட்லெர் அபாரம்:

பின்னர் ஜோடி சேர்ந்த வோக்ஸ் மற்றும் பட்லெர் நிதானமாகவும் அதே வேளையில் சுமாரான பந்தை அடித்தும் ஆடி அணியிண் ஸ்கோரை மெல்;ல மெல்ல உயர்த்தினர். நன்றாக ஆடிய இருவரும் தங்கள் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். வோக்ஸ் பட்லெர் முறையெ 5 மற்றும் 17 வது அரைசதமாகும்.

இங்கிலாந்து அபார வெற்றி:

பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் இந்த இருவரின் விககெட்டை வீழ்த்த முடியவில்லை. இருவரும் சேர்ந்து இலக்கின் அருகில் சென்றபோது பட்லெர் தன் விக்கெடை 75 ரன்களுக்கு இழந்தார். அதன் பின் வந்த பிராடு 7 ரன்க்ளுக்கு தன் விக்கெடை இழந்தார்.

test series
test series

இருப்பினும் தன் நிலையான ஆட்டதை வெளிபடுத்திய வோக்ஸ் பௌண்டிரி அடித்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 13ம் தேதி ரோஸ் பவுல் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -