தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் - மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 18) திருநெல்வேலியில் களக்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை திருநெல்வேலியில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை திருநெல்வேலியில் களக்காட்டில் உள்ள மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 18) களக்காட்டில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து களக்காட்டில் உள்ள துணை மின்நிலையத்தில் பயன்பெறும் பகுதிகளான, கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here