வீட்டை விட்டு வெளியேற பாக்கியாவிடம் காசு கேட்கும் கோபி, அதிர்ந்து போன குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
வீட்டை விட்டு வெளியேற பாக்கியாவிடம் காசு கேட்கும் கோபி, அதிர்ந்து போன குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
வீட்டை விட்டு வெளியேற பாக்கியாவிடம் காசு கேட்கும் கோபி, அதிர்ந்து போன குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
வீட்டை விட்டு வெளியேற பாக்கியாவிடம் காசு கேட்கும் கோபி, அதிர்ந்து போன குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

இந்த வீட்டிற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார். இந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றால் நான் வீட்டிற்காக செலவு செய்த பணத்தை கொடுக்க வேண்டும் என கோபி கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே ட்விஸ்ட்களுக்கு மேல் ட்விஸ்ட் வந்த படியே தான் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது, கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை தெரிய வந்ததுமே பாக்கியாவின் நிலைமை என்னவாகும் என பயந்த நேரத்தில் பாக்கியா தைரியமாக வாழ்க்கையை தொடங்க துணிந்துவிட்டார். பாக்கியாவின் தைரியத்தை பார்த்து குடும்பமே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும், இதற்கு பிறகு ஒரு நிமிடம் கூட கோபியுடன் சேர்ந்து வாழ்வே கூடாது என நினைத்து கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். குடும்பத்தில் உள்ள அனைவருமே பாக்கியாவை தடுத்தும் கூட பாக்கியா கேட்பதாக இல்லை. இதற்கு பிறகு கோபியின் துணிமணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்து கோபியை வீட்டை விட்டு வெளியேறும்படி பாக்கியா கூறுகிறார். அதாவது, கணவன்மார்கள் என்ன தவறு செய்தாலும் மனைவி வீட்டை விட்டு செல்ல வேண்டுமா, என்னால் செல்ல முடியாது இது என் வீடு நீங்கள் தான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என பாக்கியா கூறுகிறார்.

பாக்கியாவிற்கு ராமமூர்த்தி தாத்தாவும் உறுதுணையாக இருக்கிறார். குடும்பத்தை என்னால் கவனித்துக்கொள்ள முடியும் நீங்கள் கிளம்புங்கள் என பாக்கியா கூறியதும் என்ன செய்வதென்று தெரியாமல் கோபி திணறி கொண்டிருக்கிறார். இந்நிலையில், கோபி இந்த வீட்டிற்காக நான் நிறைய செலவு செய்திருக்கேன். அதனால், நான் வீட்டிற்கு செலவு செய்த 40 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்தால் வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என கோபி பாக்கியாவிடம் கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here