இனி தக்காளி இல்லாமல் இந்த ‘முட்டை கிரேவி’ சமைத்து பாருங்க., சுவை தாறுமாறா இருக்கும்!!

0

பொதுவாக நாம் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் சுவைக்காக தக்காளியை பயன்படுத்தி வருவோம். ஆனால் தற்போது தக்காளியின் விலை உச்சம் தொட்டு காணப்படுகிறது. இதனால் மக்கள் தக்காளியை வாங்கி சமைக்க சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தக்காளி பயன்படுத்தாமல் சுவையான ஒரு முட்டை கிரேவி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

  • முட்டை – 4
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 3
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • புளி கரைசல் – 50 ml
  • எண்ணெய் – 5 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்;

இந்த முட்டை கிரேவி தயாரிப்பதற்கு முட்டைகளை முதலில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். பிறகு அதில் நீள நீளமாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு கொள்ளவும்.

இப்போது வேக வைத்துள்ள முட்டையை சிறிது சிறிதாக கீறிவிட்டு இதில் சேர்த்துக் கொள்ளவும். மேலும் இதில் புளி கரைசல் மற்றும் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு 20 நிமிடம் கடாயை மூடி போட்டு மூடவும். இதன் பிறகு இதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி விட்டு அடுப்பை ஆப் செய்யவும். தற்போது நாம் தயார் செய்துள்ள இந்த முட்டை கிரேவியை சுட சுட சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here