Saturday, April 27, 2024

சென்னையில் தீவிரமாக பரவும் டெங்கு, மலேரியா – அச்சத்தில் பொதுமக்கள்!!

Must Read

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா பரவலை அடுத்து, டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவல் சென்னையில் அதிகரித்து வருகிறது. அனைத்து நோய்களுக்கும் அறிகுறிகள் ஒன்று போல் உள்ளதால் மக்கள் குழம்பி போய் உள்ளனர்.

துவங்கிய மழைக்காலம்:

கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் தொடர்ந்து கனமழை அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. இதனால் மழையுடன் குளிரும் அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் பரவல் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும் என்று அனைரும் எச்சரித்து வரும் நிலையில் சென்னையில் குளிர்காலங்களில் வரும் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றும் அதிகரித்து வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் சிலருக்கு கொரோனாவோடு டெங்கு நோய் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் பாதிப்பு சதவீதம் அதிகமாக தான் இருக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அப்பாவின் மருத்துவ கட்டணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – எஸ்.பி.சரண் வேண்டுகோள்!!

சென்னையில் உள்ள ஓமந்தூர் மருத்துவமனையில் ஒருவர் டெங்கு மற்றும் கொரோனா இரு நோய்களாலும் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பெற்று அதிர்ஷ்டவசமாக நலமாக வீடு திரும்பியுள்ளார் என்று  பேராசிரியர் நளினி தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்றும் கூறியுள்ளார்.

தொற்றுகளுக்கு உள்ள வேறுபாடு:

இந்த காய்ச்சல்களுக்கு வேறுபாடுகள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அறிகுறிகளின் வேறுபாடுகளை வைத்து மக்கள் வியாதிகளுக்கான வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல்:
  • கொரோனாவை போல் அல்லாமல் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்காது.
  • பின் தலையில் வலி இருக்கும். ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைவதால் தோலில் ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் திட்டுகள் வெளிப்படும்.
symptoms of dengue
symptoms of dengue
  • காய்ச்சல் வந்த சுவடு தெரியாமல், சிறிது நேரத்தில் வியர்த்தால் டெங்கு நோய் தொற்று உங்களுக்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
  • 99 சதவீத அளவில் மிதமான காய்ச்சல் இருக்கும்.
  • தொண்டை எரிச்சல், கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வழிதல் போன்ற தொந்தரவுகள் இருக்கும்.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் முறையாக சிகிச்சை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மலேரியா காய்ச்சல்:

  • மலேரியா தொற்று பாதிக்கப்பட்டவருக்கு ஜலதோஷம், காய்ச்சல், களைப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
  • தீவிரமாக இருந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்.
  • மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கும். உணர்வு நிலை குறைவாக இருக்கும்.

இதனை தவிர்த்து தற்போது எலி காய்ச்சல், டைபாய்ட் போன்ற நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -