Wednesday, April 24, 2024

அப்பாவின் மருத்துவ கட்டணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – எஸ்.பி.சரண் வேண்டுகோள்!!

Must Read

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகமாக அவரது சிகிச்சைக்கு பணத்தினை வசூலித்ததாகவும் அதனை அவர்கள் குடும்பத்தினரால் கட்ட இயலவில்லை என்றும் சர்ச்சைக்குரிய வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் அவரது மகன் எஸ்.பி.சரண் இதற்கான விளக்கத்தினை கொடுத்துள்ளார்.

பாடகர் மறைவு:

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனைத் தொடர்ந்து ஒரு வதந்தி இன்று காலை முதல் பரவி வந்தது. அது என்னவென்றால், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.எம் மருத்துவமனை அவரது சிகிச்சைக்கு அதிகமான கட்டணத்தை வசூலித்ததாகவும், அதனை அவரது குடும்பத்தினரால் கட்ட இயலாததால் அவரது மகன் எஸ்.பி.சரண் துணை குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு பேசியதால் தான் எஸ்.பி.பி உடல் மருத்துவமனை நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டது என்று வதந்திகள் பரவி வந்தது.

பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்:

இதற்கு அவரது மகன் எஸ்.பி.சரண் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது “இது சரியான தளமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் கூற போகும் செய்தி மிகவும் முக்கியமானது. எனது தந்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக வசூலிக்கப்பட்ட கட்டண விவரம் குறித்து பல பொய்யான வதந்திகள் பரவுகிறது. இப்படி பொய்யான தகவல்களால் மனம் கவலை அடைகிறது.”

அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மீண்டும் முழு ஊரடங்கு – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

“என் தந்தையின் ரசிகர்களளாக இருப்பவர்கள் யாரது மனதையும் காயப்படுத்த மாட்டார்கள். தயவு செய்து யாரும் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். மருத்துவமனை கட்டண விவரங்கள் விரைவாக வெளியிடப்படும். மருத்துவமனையில் அப்பாவை பார்த்துக்கொண்ட அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும் நன்றிகள். வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -