பள்ளி மாணவர்களுக்கு ‘இ-புத்தகம்’ – எல்லா வகுப்புகளுக்கும் தயார் செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிரம்..!

0

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்களை இ-புத்தகம் வடிவில் தயார் செய்து இணையத்தில் வெளியிட தமிழக கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. புத்தங்களை அச்சடிக்கும் பணி தாமதம் ஆவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1200ஐ தாண்டி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளன. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இ-புத்தகம் தயாரிப்பு:

ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த பாடப்புத்தகம் அச்சடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டு உள்ளது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களையும் இ-புத்தகம் வடிவில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதில் முதலாக 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 புத்தகங்களை தயாரித்து வெளியிடவும், அதற்கு அடுத்தபடியாக 8, 9ம் வகுப்புகளுக்கு தயார் செய்து இணையதளத்தில் வெளியிடவும் திட்டமிப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here