திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!!

0

திமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் துரைமுருகன். இவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

துரைமுருகன்:

துரைமுருகன் கடந்த 1971ம் ஆண்டில் முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2016ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர் வேலூர் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். மேலும் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதிவு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அகவிலைப்படி உயர்வு – அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷி!!

மருத்துவமனையில் அனுமதி:

இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வருவார். அப்போதும் கூட கட்சி பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இன்று மீண்டும் உடல் நலக்குறைவால் இவர் பாதிக்கப்பட்டார். இதனால் இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவமனை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here