அகவிலைப்படி உயர்வு – அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷி!!

1

வரும் வாரங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ள்ளது. இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளார்கள். இந்த தகவலினால் அனைவரும் குஷியில் உள்ளனர்.

அகவிலைப்படி:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வரையிலான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை கூடுதல் தவணையை செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தவும் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு அகவிலை நிவாரணத்தை 21 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசவை ஒப்புதல் வழங்கி இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு:

கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த முடிவு கடந்த ஏப்ரல் மாதம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது கொரோனா வைரஸில் இருந்து அனைவரும் மீண்டு வருவதால் நாட்டின் பொருளாதாரமும் உயர தொடங்கியது. இதனால் பணவீக்க விகிதம் 28 சதவீதத்திற்கு ஏற்ப அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.

அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

இந்நிலையில் இந்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here