அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டிஷர்ட் அணியக்கூடாது – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

0

மஹாராஷ்டிராவில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் பணிக்கு வரும்போது அதற்கேற்ற ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பெண்களுக்கு சேலை, சுடிதார், குர்தா போன்ற ஆடைகளும், ஆண்களுக்கு பேண்ட் ஷர்ட், கதர் ஆடை அணிந்து வர உத்தரவு போடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிரா மாநிலம் அம்மாநிலத்தில் அரசு வேலை பார்ப்பவர்களுக்கு அடைகளுக்கான புதியவிதி ஒன்றை விதித்துள்ளது. அவ்விதிபடி தான் ஊழியர்கள், ஆடை அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிய கூடாது. அலுவலகத்திற்கு வரும் போது மோசமான செருப்புகளை அணிந்து வரக்கூடாது. கண்ணியமான ஆடைகளை உடுத்த வேண்டும், சுத்தமாக அவர்களுக்கான சரியான ஆடைகளை உடுத்த வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது பற்றி மஹாராஷ்டிரா அரசு கூறியதாவது, ஆடைகள் பொறுத்தவரை சுத்தமாகவும், சரியான ஆடைகளும் அணிய வேண்டும். மோசமான செருப்புகள் அணிந்து வரக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடைகள் மட்டுமே அணியவேண்டும். ஜீன்ஸ், டி ஷர்ட் கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது.

பெண் ஊழியர்கள் சேலை, சல்வார்ஸ்/சுடிதார், குர்த்தா, பேண்ட் சட்டைகள் அணியலாம் வேண்டுமென்றால் துப்பட்டா அணிந்துகொள்ளலாம்.மேலும் பெண் ஊழியர்கள் ஷாண்டல்ஸ், செப்பல்ஸ், ஷூஷ் போடலாம். ஆண் ஊழியர்கள் பேண்ட் சட்டைகள் மட்டுமே அணிய வேண்டும். டிசைனர் ஷர்ட் போடக்கூடாது. இவர்கள் ஷூ மற்றும் ஷான்டால்ஸ் மட்டுமே போட வேண்டும்.

நீண்ட கால தோழியை மணந்தார் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி!!

இதுபோன்ற கட்டுப்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். 2019ம் வருடம் முதல் பீகார் மாநிலமும் இந்த விதியை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here