மாட்டுவண்டியில் தாய்மாமன் சீர்வரிசை – சினிமா பாணியில் கோலாகலமாக நடந்த பூப்புனித நீராட்டு விழா!!

0

ஈரோடு மாவட்டத்தில் மாட்டுவண்டியில் கொண்டுவந்து 100க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளோடு தாய்மாமன் சீர்வரிசை செய்யப்பட்டிருக்கிறது. சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு நன்னீராட்டு விழா சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.

தாய்மாமன் சீர்வரிசை

தமிழ்நாட்டில் பொதுவாக எந்தவொரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் தாய்மாமன் பங்களிப்பு அதிகமாகவே காணப்படும். தாய்மாமன் இல்லாமல் திருமணமோ வேறு எந்த நல்ல காரியங்களும் நடக்காது. காலங்கள் மாறின போதிலும் இந்த நிகழ்வு மட்டும்தான் தமிழ்நாட்டில் மாறாத வழக்கமாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை – கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் ராஜா என்பவருக்கு மோகனப்பிரியா என்ற தங்கை உள்ளார். இவருக்கு ரிதன்யா மற்றும் மித்ரா ஸ்ரீ என்ற இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் பருவவயதை எட்டியுள்ளதால் அவர்களுக்கு பூப்புனித நன்னீராட்டு விழா அவர்களது சொந்த கிராமமான கள்ளிப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருமகள்களுக்கு சிறப்பான முறையில் சீர் செய்ய திட்டமிட்ட ராஜா கோபிச்செட்டிபாளையத்திலிருந்து கள்ளிப்பட்டிக்கு மாட்டுவண்டி மூலம் 100 வகையான சீர்வரிசை தட்டுகளை கொண்டுவந்தார். அவரே தானாக முன்வந்து மாட்டு வண்டியை ஒட்டிவந்துள்ளார். மேலும் அவரது சொந்த பந்தங்கள் புடை சூழ 15 மாட்டு வண்டியிலும் கார்களிலும் அந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர் வரிசையை கண்ட அக்கிராம மக்கள் சினிமா பார்ப்பதுபோல ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பாரம்பரிய முறைப்படி நடந்த இப்பூப்புனித நீராட்டு விழாவில் தென்னை ஓலையில் வேயப்பட்ட குடிசையில் நெல்மணிகளை கொட்டி அந்த சீர்வரிசை தட்டுகளை வைத்திருந்தனர். அதே போல பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தி சமையல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டது. இதுகுறித்து தாய்மாமன் ராஜா கூறுகையில், ‘தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நினைவு கூறும் வகையிலும் வருங்கால சந்ததிகளுக்கு நம் பாரம்பரியத்தை தெரிவிக்கும் வகையிலும் இந்த நீராட்டு விழாவை இவ்வாறு நடத்தினோம்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here