Saturday, May 18, 2024

ரஷ்யாவிற்கு படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் மரணம் – நதியில் மூழ்கிய சோகம்!!

Must Read

ரஷ்யா நாட்டிற்கு மருத்துவம் படிப்பதற்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் நதியில் மூழ்கி இறந்துள்ளது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவம் பயில சென்ற மாணவர்கள் :

தமிழகத்தை உள்ள சென்னை பெரம்பூரை சேர்ந்த ஸ்டீபன் (20), தாரபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக் (22), திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் (23) மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர் தான் இறந்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்க்காக ரஷ்யா நாட்டில் உள்ள வோல்காகிராட் பகுதியில் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளார், சென்னையை சேர்ந்த ஸ்டீபன்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இவர் நேற்று தனது விடுதி மாணவர்களுடன் வோல்கா நதியில் விளையாட சென்றுள்ளனர். அப்போது, ஸ்டீபன் ஒரு மாணவர் நதியில் தத்தளிப்பதை பார்த்துள்ளார். அதனால் உடனடியாக நதிக்கு சென்று அந்த மாணவரை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளார்.

எதிர்பாராத விபத்து:

ஆனால், அவரும் நிலை தடுமாறி நீரில் முழ்கியுள்ளார். இவரை காப்பாற்ற என்று இன்னும் இருவர் சென்று அவர்களும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இறந்த உடல்கள் கரை ஓரமாக ஒதுக்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரஷ்யா போலீஸ் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்தியாவில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!!

இறந்தவர்களில் சடலங்களை தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய அரசு மற்றும் மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கவும் முடிவுசெய்துள்ளனர். கொரோனா காலம் என்பதால் தாமதம் ஏற்படவாய்ப்புள்ளதால் உறவினர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -