இயக்குனர் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்.., 15 கோடி செலவில் உருவாகும் “RC15” பட பாடல்!!

0
இயக்குனர் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்.., 15 கோடி செலவில் உருவாகும்
இயக்குனர் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்.., 15 கோடி செலவில் உருவாகும் "RC15" பட பாடல்!!

இயக்குனர் சங்கர் படைப்பில் உருவாகும் RC15 படத்தை குறித்து ஒரு சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் தான் ஷங்கர். தற்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம்சரணை வைத்து RC15 படத்தையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்தியன் 2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் RC 15 படத்தில் பிசியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் இப்படத்தை குறித்த ஒரு முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது இயக்குனர் ஷங்கர் படத்தின் கதை அம்சத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாரோ, அதே அளவிற்கு படத்தில் இடம்பெற்ற பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற “எகிறி குதித்தேன்” பாடல், அந்நியன் படத்தில் அண்டை காக்கா கொண்ட காரி பாடல், நண்பன் படத்தில் அஸ்க்கு லஸ்க்கு பாடல்கள் அனைத்து மிகப்பெரிய தொகையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முல்லை அம்மாவை சீண்டி பார்த்த மீனா, ஐஸ்வர்யா.., சரியான ஆப்பு வைத்த பார்வதி.., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

அந்த வகையில் RC15 படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு பாடலை, கிட்டத்தட்ட 15 கோடி செலவில் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கரின் சினிமா கேரியரில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பாடல் என்றால் RC15 படத்தில் இடம்பெறும் பாடல் தான். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chennai Memes (@chennaimemes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here