அஜித்தை தொடர்ந்து விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட வினோத்.., அதுவும் இந்த கதையிலயா?

0
அஜித்தை தொடர்ந்து விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட வினோத்.., அதுவும் இந்த கதையிலயா?
அஜித்தை தொடர்ந்து விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட வினோத்.., அதுவும் இந்த கதையிலயா?

துணிவு திரைப்படத்தை இயக்கிய வினோத் தளபதி விஜயை குறித்து பேசியது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இயக்குனர் வினோத்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர்கள் மத்தியில் தனது கொடியை நட்டவர் தான் இயக்குனர் வினோத். அந்த வகையில் இவர் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் கொடுத்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த இரண்டு திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், தற்போது 3 வது முறையாக அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கடந்த வாரம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி தற்போது வரை வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் துணிவு கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் அதிகம் கல்லா கட்டி வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் குறித்து வினோத் பேசியது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவங்க 2 பேரையும் வாழ்க்கையில் இழந்துட்டேன்., பழசை நினைத்து புலம்பும் வனிதா விஜயகுமார்!!

அவர் கூறியதாவது சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், விஜயை வைத்து எப்போது படம் எடுக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய் சாருக்கு அரசியல் சம்பந்தப்பட்ட மூவியை எடுக்கணும். அந்த வகையில் அவருக்கு நான் சொன்ன எல்லா கதைகளிலும் பாலிடிக்ஸ் இருக்கு என்றும் கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here