இவங்க 2 பேரையும் வாழ்க்கையில் இழந்துட்டேன்., பழசை நினைத்து புலம்பும் வனிதா விஜயகுமார்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பேசப்பட்ட வனிதா விஜயகுமார், தன் வாழ்க்கையில் 2 முக்கிய நபர்களை இழந்து விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். இவரின் அடுத்தடுத்த திருமணம் போன்ற ஒரு சில நடவடிக்கைகளை பார்த்து, இவரின் தந்தையான நடிகர் விஜயகுமார் இவரை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜயகுமார் குடும்பத்தை சார்ந்த யாரும் இவருடன் பேசுவது கிடையாது. இந்த நிலையில் வனிதா தன் குடும்பம் குறித்த முக்கிய, கருத்து ஒன்றை பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது தனது தங்கைகளான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியை தான் இழந்து விட்டதாகவும், இனி அவர்களுடன் மீண்டும் சேர்வேனா? என்பது தெரியாது என உருக்கமாக பேசினார்.

ஆனால் அவர்களைப் போலவே இருக்கும் எனது இரண்டு மகள்களையும், என் அம்மா மற்றும் தங்கைகளாகத்தான் நான் இதுவரை பார்த்து வருகிறேன் என உருக்கமாக பேசியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here