
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்த வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரம்பித்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அண்மையில் இப்படத்தில் ரஜினி கதாபாத்திரமான மொய்தீன் பாய் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பவை பெற்றிருந்தாலும், பிரியாணி கடை விளம்பரத்திற்கு எடுத்தது போல் இருக்கிறது என்று நெட்டிசன் பலரும் விமர்சித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகள் செய்த காரியத்தால் கோபத்தில் சென்னைக்கு கிளப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது லால் சலாம் படத்துக்காக ரஜினிக்கு மும்பையில் 10 நாட்களுக்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் போர்சன் வெறும் 3 நாட்கள் தான் எடுக்கப்பட்டதாம். மற்ற நாட்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சரியாக வரவில்லையாம். ஒரு இயக்குனர் சரியான திட்டமிடுதலுடன் இருந்தால் மட்டுமே படத்தை குறித்த நாட்களில் எடுக்க முடியும்.
தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு ஜாக்பாட்., வெளியான சூப்பர் அறிவிப்பு!!
ஆனால் இந்த விஷயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோட்டை விட்டுள்ளார். இதனால் காண்டான ரஜினி, ஒழுங்காக திட்டமிட்டு தன்னை அழைக்குமாறு என்று கூறி சென்னைக்கு கோபத்துடன் புறப்பட்டு வந்துவிட்டராம். இச்சம்பவம் பெரும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.