
இந்திய அணியின் முன்னணி வீரரான கே எல் ராகுல், தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதோடு, அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் கே எல் ராகுல் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். தற்போது ஓய்வில் இருக்கும் இவர், இந்திய அணியின் 3 தலைமைகளுக்கு கீழ் இருந்த விதம் குறித்து மனம் திறந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது முதலில் தோனி குறித்து கூறிய இவர், தோனி தான் தனது முதல் கேப்டன். இவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். இதில், குறிப்பாக ஒவ்வொருவருடனும் நல்ல உறவை எப்படி வளர்த்துக் கொள்கிறார் என்பதே ஆச்சரியப்படும் வகையில் பார்ப்பதாக கே எல் ராகுல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, “விராட் கோலி ஒரு கேப்டனாக உயர்ந்த தரத்தை அமைத்தார். அவரது ஆர்வம், ஆக்ரோஷம், அவர் முன்னால் இருந்து வழி நடத்திய விதம் அனைத்தும் தன்னை ஊக்கப்படுத்தியது.
மேலும், விராட் கோலி உடற்தகுதி மற்றும் உணவு இவற்றில் அதிக கவனம் செலுத்த அனைவரிடமும் அறிவுறுத்துவார்” என கே எல் ராகுல் தெரிவித்துள்ளார். இவர்களது வரிசையில், தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா “ஒரு தலைவராக மிகவும் கூர்மையாக இருக்கிறார், ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்னரும் நிறைய வீட்டுப் பாடங்களை செய்கிறார். மேலும், ஒவ்வொரு வீரரின் வலிமை மற்றும் ஆட்டம் குறித்து நன்கு அறிந்தவாராக உள்ளார்” என ஓய்வில் இருக்கும் கே எல் ராகுல் மனம் திறந்துள்ளார்.